Introduction:
தமிழ் கவிதை உலகம் உணர்வுகளால் நிரம்பிய ஒன்று. சில சமயம் ஒரு பார்வை, ஒரு சிரிப்பு, அல்லது ஒரு சிறிய தருணமே கவிதையாக மாறுகிறது. அப்படிப்பட்ட மாயையை வெளிப்படுத்தும் இந்த கவிதை சிரிப்பின் அதிசயம், மனிதனின் உள்ளத்தை தொட்டுவிடும்.
இது வெறும் காதல் கவிதை அல்ல, உணர்வுகளை வெளிப்படுத்தும் தமிழ் கவிதை. கவிதை தெரியாமல் கூட ஒருவர் வெளிப்படுத்தும் சிரிப்பு, மற்றொருவருக்கு கவிதையாக உணரப்படுகிறது. அந்த அதிசயத்தை இந்த வரிகள் வெளிப்படுத்துகின்றன.
🌙 சிரிப்பின் அதிசயம்
பாலுண்ட கிறக்கதிலும்
வானில் பறக்கும் மயக்கத்திலும்
வந்து வந்து போகிறது
ஒரு சிரிப்பில்!
அந்த அதிசயம் ஏழும்
தகுதியை இழக்க தான் போகிறது
அந்த சிரிப்பில்!
கவிதை தெரியாது
அவளுக்கும்
எனக்கும்
ஆனால் –
அவளால் சொல்ல முடிகிறது
என்னால் படிக்க முடிகிறது
இந்த தனி சிரிப்பில்!

0 Comments
Thankyou so much